திருவிவிலிய ஞாயிறு / வாரம் / மாதம்

1974இல் விவிலிய ஞாயிறாக ஆரம்பித்தது 1988இல் விவிலிய வாரமாக உருவெடுத்தது. ஒரு சில இடங்களில் செப்டம்பர் மாதம் முழுவதும் விவிலிய மாதமாகக் கொண்டாடப்பட்டது. 2023 முதல் தமிழகம் முழுவதும் விவிலிய மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அகில உலக திருஅவை பரிந்துரைக்கும் மையப்பொருளையொட்டி திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள், விவிலியப் போட்டிகள், கலைநிகழ்வுக்களுக்கான பரிந்துரைகள் அடங்கிய கையேடு, சுவரொட்டிகள் இவற்றை விவிலியப் தயாரித்து எல்லா மறைமாவட்டங்களுக்கும் அனுப்புகிறது. மறைமாவட்ட/ வட்ட/ பங்கு அளவில் இறைவார்த்தையை மாதம் முழுவதும் கொண்டடும்படி எல்லா மறைமாவட்டச் செயலர்களையும் பணிக்குழு ஊக்குவிக்கிறது. இம்மாதத்தில், பல மறைமாவட்டங்களில் விவிலியம் குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. விவிலிய விநாடி வினா, விவிலியப் பகுதிகளை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போன்ற போட்டிகளும், விவிலியக் கண்காட்சியும் நடைபெறுகின்றன. மக்கள் பெரும் எண்ணிக்கையில் இவற்றில் பங்கு பெறுவது பெரும் உந்து சக்தியாக உள்ளது. நிறைய எண்ணிக்கையில் மக்கள் இவற்றில் பங்கு பெற்றுப் பயன் அடைகிறார்கள். மேலும் 2023 முதல் அனைத்துத் தரப்பினரையும் விவிலிய வாசிப்பில் ஊக்கப்படுத்தும் நோக்கில் தமிழக அளவில் முதியோருக்கும் இளையோருக்கும் வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைப் போட்டியை பணிக்குழு அறிமுகம் செய்தது. 2024 முதல் துறவறத்தார்க்கென்று தனியே ஒரு தலைப்புக் கொடுத்து அவர்களையும் பெரும் எண்ணிக்கையில் பங்கு பெறச்செய்கிறது.

தமிழ்நாட்டில் தொடங்கிய இக்கொண்டாட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல அகில உலகத் திரு அவையிலும் பரவியிருக்கிறது. அதற்கும் தமிழக விவிலியப் பணிக்குழுவின் முன்னோடி என்றால் அது மிகையாகாது.

கட்டுரைப் போட்டி முடிவுகள்

விவிலியக் கட்டுரைப் போட்டி - செப் 2024 முடிவுகள்

விவிலிய மாதம் - 2024

விவிலிய ஞாயிறு - 2023