1981ஆம் ஆண்டு முதன்முதலாக தூத்துக்குடி மறைமாவட்டத்தில் தொடங்கப்பட்ட விடுமுறை விவிலியப் பள்ளியானது 1990 முதல் தமிழக அளவில் கொண்டாடப்பட்டது. 1992 முதல் 2002 வரை பளையங்கோட்டை, தூத்துக்குடி மறைமாவட்டங்கள் இணைந்து பாடங்களையும் துணைக்கருவிகளையும் தயாரித்துக்கொடுத்தன. 2003 தொடங்கி விவிலியப்பணிக்குழுவே அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வோராண்டும் ஒரு மையக்கருத்தையொட்டி நான்கு குழுக்களுக்கும் பாடங்களும் துணைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன. புனித பவுல் விவிலிய நிலையம் மூடப்பட்டதிலிருந்து செயலரின் இருப்பிடமும் அலுவலகமும் முப்பணி மையத்திற்கு மாறியது. அனைத்துப் பணிகளும் அங்கிருந்தே செய்யப்பட்டன; படிப்படியாக விடுமுறை விவிலியப்பள்ளியும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. 2011இல் அடையாள வில்லை (badge), பாடல் தாள், வருகைப்பதிவேட்டுக்கான படம், ஆசிரியர் கையேடு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. 2012இல் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையும் வெளியிடப்பட்டது. 2017 முதல் மூன்று மையங்களில் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி தொடங்கப்பட்டது. 2022 முதல் மூன்றாண்டு சுழற்சி முறையில் மையக்கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. மறைமாவட்டப் பணிக்குழுவிடமிருந்து கற்றுக்கொண்டதை தமிழக விவிலியப் பணிக்குழுத் தமிழகம் முழுவதும் எல்லா மறைமாவட்டங்களுக்கும் கொண்டு சென்றது. தேசிய விவிலியப் பணிக்குழு அதை நம்மிடமிருந்து பெற்று நாடு முழுவதும் பரவலாக்கம் செய்து வருகிறது.
விவிலிய அறிவை வளர்த்தல்: பைபிளின் முக்கியமான பகுதிகள், கதைகள் மற்றும் அதன் வாழ்வியல் அறிவுரைகளை குழந்தைகளுக்கும் இளையோருக்கும் மிகவும் எளிதாகப் பகிர்ந்து கொடுக்கும் ஒரு மேடையாக செயல்படுகிறது.
நேர் அனுபவக் கற்றல்: விவிலிய கதைகளை நாடகங்கள், பாடல்கள், மற்றும் கலைப் பயிற்சிகள் மூலம் அனுபவிக்கக் கூடியதாக மாற்றுகிறது.
ஆன்மீக வளர்ச்சி: மாணவர்களின் ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்தி, கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைகளை பலப்படுத்த உதவுகிறது.
படத் தொகுப்பு விடுமுறை விவிலியப் பள்ளி (VBS)
2024
கூடுவோம்... கொண்டாடுவோம் VBS - 2024 பாடல்கள்
கூடுவோம்... கொண்டாடுவோம் VBS - 2024
VBS ஆசிரியர் கையேடு முதல்குழு - விருப்ப நிலை UKG, I, II வகுப்புகள்
VBS ஆசிரியர் கையேடு முதல்குழு - விருப்ப நிலை III, IV, V வகுப்புகள்
VBS ஆசிரியர் கையேடு முதல்குழு - விருப்ப நிலை VI, VII, VIII வகுப்புகள்
VBS ஆசிரியர் கையேடு முதல்குழு - விருப்ப நிலை IX, X, XI வகுப்புகள்
மாணவர்கள் - I வகுப்பு - பக்கம் - 1 - 20 - 2024
மாணவர்கள் - II வகுப்பு - பக்கம் - 1 - 20 - 2024
மாணவர்கள் - III வகுப்பு - பக்கம் - 1 - 20 - 2024
மாணவர்கள் - IV வகுப்பு - பக்கம் - 1 - 20 - 2024
2017
ஆபிரகாமின் அழைப்பு( மாணவர் கையேடு )
மாபெரும் அழைத்தல்கள்( மாணவர் கையேடு )
திருத்தூதர் பணிகள் முன்னுரை( மாணவர் கையேடு )
மலைப் பொழிவு - பேறுபெற்றோர்( மாணவர் கையேடு )
யேசுவின் போதனைகள்( மாணவர் கையேடு )
ஆசிரியர்கள் கவனத்திற்கு ( ஆசிரியர் கையேடு )
ஆசிரியர்கள் கவனத்திற்கு ( ஆசிரியர் கையேடு )
ஆசிரியர்கள் கவனத்திற்கு ( ஆசிரியர் கையேடு )
ஆசிரியர்கள் கவனத்திற்கு ( ஆசிரியர் கையேடு )
ஆசிரியர்கள் கவனத்திற்கு ( ஆசிரியர் கையேடு )
கலை வழிப் பயிற்சி ( ஆசிரியர் கையேடு )
இறைவார்த்தைக்கு அஞ்சலி ( ஆசிரியர் கையேடு )
அசிசிநகர் புனித பிரான்சிஸ் ( 1182 - 1226 )
சமத்துவ சமுதாயம் அமைப்போம் ( குறுநாடகம் )