
Golden Jubilee Celebration Tnbclc, Tindivanam 27th November 2024
- 02 Dec 2024
Golden Jubilee Celebration Tnbclc, Tindivanam 27th November 2024
மேலும் படிக்க →தமிழகம் மற்றும் புதுவை இலத்தீன் ஆயர் பேரவையின் கீழ் இயங்கும் விவிலியப் பணிக்குழு 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது தற்போது திண்டிவனத்திலுள்ள தமிழக முப்பணி நிலையத்திலிருந்து செயல்படுகிறது. இதன் தலைவராக மேதகு. ஸ்டீபன் அந்தோணி, தூத்துக்குடி ஆயர் 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுகின்றார். முழு நேர பொதுச் செயலாளராக அருள்பணி ச. ஸ்தனிஸ்லாஸ் பணியாற்றுகின்றார்.
மேலும் படிக்க →விவிலிய உலகக் கண்ணோட்டத்தில் இருந்து கற்பிப்பது ஒரு சவாலான மற்றும் பலனளிக்கும் முயற்சியாகும். கல்வி வளர்ச்சிக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் இடையே ஒரு நுட்பமான சமநிலையை உருவாக்க இது தேவைப்படுகிறது.
2016ஆம் ஆண்டு www.tnbcbc.org என்ற வலைத்தளம் தொடங்கப்பட்டு இணைய வழி விவிலியக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்டவர் பதிவு செய்தாலும் 16 பேர் மட்டுமே தொடர்ந்து பங்கெடுத்தார்கள். எனவே அம்முயற்சி கைவிடப்பட்டது. ஆனால், கோவிட் பெருந்தொற்று மனித சமுதாயத்துக்குக் விட்டுச்சென்ற ஒரு கொடை என்னவென்றால் சமூகத்தொடர்பு ஊடகங்களின் அசுர வளர்ச்சி.
1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை அநேகர் விவிலியத்தை இரண்டாண்டுகளில் கற்றுக்கொள்ள பேருதவியாக இருந்திருக்கிறது. 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியிருக்கென்று ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சியில் பெரியவர்களும் பங்கேற்றுப் பயன்பெறுகின்றார்கள். தற்போதைக்கு இதில் சேர்ந்து விவிலியம் கற்பவர்கள் வெகு சிலரே. தமிழக விவிலியப் பணிக்குழுவிடமிருந்த அஞ்சல்வழி விவிலியக் கல்வியை தேசிய விவிலியப் பணிக்குழுவானது நாடு முழுவதும் பரவலாக்கம் செய்திருக்கிறது.
மூன்றாண்டு சுழற்சி முறையில் விவிலியம் முழுவதையும் பொது நிலியினர்க்கும் துறவறத்தார்க்கும் கற்பிக்கும் நோக்குடன் 1997 முதல் கோடை விவிலியப் பயிலரங்கம் மையத்திலும் மதுரை, சிவகங்கை போன்ற மறைமாவட்டங்களிலும் ஒரு சில ஆண்டுகள் நடத்தப்பட்டது. கோவிட் தொற்றுக்குப்பிறகு தற்போது மையத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது.
துறவியர்க்கும் பொதுநிலையினர்க்கும் ஒவ்வோராண்டும் திண்டிவனத்திலும் மற்ற இடங்களிலும் விவிலியம் சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. 2009-2015 காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு விவிலியத்தைக்கற்பிக்கவும் அவர்களை ஆன்மிகத்தில் வளர்த்தெடுக்கவும் ஆண்டு முழுவதும் தொடர் பயிற்சியும் கருத்தரங்குகளும் திண்டிவனத்தில் மட்டுமல்ல சிவகங்கை, தர்மபுரி செங்கல்பட்டு போன்ற இடங்களிலும் நடத்தப்பெற்றன.
1981ஆம் ஆண்டு முதன்முதலாக தூத்துக்குடி மறைமாவட்டத்தில் தொடங்கப்பட்ட விடுமுறை விவிலியப் பள்ளியானது 1990 முதல் தமிழக அளவில் கொண்டாடப்பட்டது. 1992 முதல் 2002 வரை பளையங்கோட்டை, தூத்துக்குடி மறைமாவட்டங்கள் இணைந்து பாடங்களையும் துணைக்கருவிகளையும் தயாரித்துக்கொடுத்தன. 2003 தொடங்கி விவிலியப்பணிக்குழுவே அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வோராண்டும் ஒரு மையக்கருத்தையொட்டி நான்கு குழுக்களுக்கும் பாடங்களும் துணைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன.
அனைத்தையும் பார்க்க →
அனைத்தையும் பார்க்க →
Golden Jubilee Celebration Tnbclc, Tindivanam 27th November 2024
மேலும் படிக்க →கோட்டாறு மறை மாவட்ட விவிலிய பணிக்குழு சார்பாக 17.08.2024 அன்று இறைவெளிப்பாடு
மேலும் படிக்க →பாளையங்கோட்டை மறைமாவட்டம் விவிலியப் பணிக்குழு மாபெரும் கிறிஸ்து பிறப்பு 2025 ஜூபிலி ஆண்டை கொண்டாடும்...
மேலும் படிக்க →முப்பணி மையத்தின் பொன்விழா ( 1974-2024 )
மேலும் படிக்க →கருத்தரங்கு 2 ஆம் வத்திக்கான் சங்கத்தின் கொள்கைதிரட்டுகள்
மேலும் படிக்க →