பாளையங்கோட்டை மறைமாவட்டம் விவிலியப் பணிக்குழு மாபெரும் கிறிஸ்து பிறப்பு 2025 ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதத்திலும், விவிலிய மாதத்தை சிறப்பிக்கும் வகையிலும் மறைவட்ட அளவில் நான்கு நற்செய்தி நூல்களில் இருந்து மாபெரும் விவிலிய வினாடி-வினா போட்டியினை நடத்தி வருகிறது இதுவரை மூன்று மறைவட்டங்களில் இப்போட்டியானது மிகச்சிறப்பாக நடந்தேறியது. 06.10.2024 ஞாயிறன்று பாளை மறைவட்ட பங்குகளுக்கான போட்டியானது மறைமாவட்ட திருத்தலமான மார்க்கெட் புனித அந்தோணியார் திருத்தல வளாகத்திலுள்ள அன்னை தெரசா அரங்கத்தில் வைத்து நடைபெற்று முடிந்தது.13 பங்குகளில் இருந்து அழைக்கப்பட்ட ஒரு பங்கிற்கு 5 பேர் வீதம் 65 பேர் முழுமையாக போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்டனர் முன்னதாக வேதியர்களின் தொடக்க வழிபாட்டுடனும், செயலர் தந்தை அவர்களின் போட்டி குறித்த விளக்கங்களுடனும், இனிதே தொடங்கியது.
15 சுற்றுகளாக அமைந்த இப்போட்டியினை வேதியர்கள் மிச்சிறப்பாக வழி நடத்தினார்கள் பாளை பேராலயம், சாந்திநகர், இருதயநகர் பங்கு குழுவினர்கள் போட்டியில் வென்று முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்று மகிழ்ந்தனர்.மேலும் போட்டியில் பங்கெடுத்த அனைத்து பங்கு குழுவினர்களுக்கும், சிறப்பான பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் பார்வையாளர்களாக கலந்து கொண்டு வினாக்களுக்கு பதிலளித்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இம்மாபெரும் வினாடிவினா போட்டிக்கு பங்குதளங்களில் இருந்து போட்டியாளர்களை அனுப்பி வைத்த பாளை மறைவட்ட பங்கு தளங்களின் அருட்தந்தையர்கள் அனைவருக்கும் விவிலியப் பணிக்குழு சார்பாக நன்றியினை தெரிவித்து மகிழ்கிறேன், நன்றி.
கிறிஸ்துவில் அன்புடன்,
அருட்பணி.ச.லூர்து மரிய சுதன், செயலர்,
விவிலியப் பணிக்குழு