திருச்சி மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழுவில் பயிற்சி பெற்ற, தன்னார்வ வேதியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் விவிலியக் கண்காட்சியானது 01.09.2024, ஞாயிறு இன்று அம்சம் பங்கின் கிளைப்பங்கான நவலூர் குட்டப்பட்டில் நடைபெற்றது.
ஞாயிறு திருப்பலியை மறைக்கல்வி மாணவர்கள் சிறப்பித்தனர். அதன் பிறகு ஆலய வளாகத்தில், விவிலியத்தின் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தன்னார்வ வேதியர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை பெரியோர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு விவிலிய வினாடி வினா, விவிலிய விளையாட்டுகள் நடைபெற்றன.
இதற்காக உழைத்த தன்னார்வ வேதியர்கள், ஒத்துழைப்பு நல்கிய பங்குத் தந்தை, ஊர் மக்கள் அனைவருக்கும் எம் அன்பு கலந்த நன்றிகள்!
தோழமையில்,
அருள்பணி. சு. மரியசூசை, செயலர்,
கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு,
திருச்சி.