பாளையங்கோட்டை மறைமாவட்டம் விவிலியப் பணிக்குழு ஆண்டுதோறும் விவிலிய மாதத்தை சிறப்பிக்கும் வகையில் விவிலிய எழுத்து தேர்வு உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் விவிலிய மாதத்தையும், 2025 யூபிலி ஆண்டை சிறப்பித்திடவும் திட்டமிட்டு மறைவட்ட அளவில் மத்தேயு,மாற்கு, லூக்கா, யோவான் நூல்களிலிருந்து மாபெரும் விவிலிய வினாடி வினா போட்டியினை நடத்திட முடிவெடுத்து அதன்படி இன்று 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரம் மறைவட்ட பங்குகளிலிருந்து ஒரு பங்கிற்கு 5 நபர்கள் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவ்வினாடி வினா போட்டியானது இருதயகுளம் பங்கிலுள்ள பங்கு அரங்கத்தில் சரியாக காலை 10.30 மணிக்கு துவங்கியது. இருதயகுளம் பங்கின் பங்குத்தந்தை அருட்பணி.
பாக்கிய செல்வன் அவர்கள் துவக்கி வைத்து போட்டி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிக நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள். 15 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் தாளார்குளம் பங்கு முதல் இடத்தையும், வீரவநல்லுர் பங்கு இரண்டாம் இடத்தையும், கருத்தப்பிள்ளையூர் பங்கு மூன்றாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றார்கள் இவர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.அதேபோல் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டியினை வேதியர்கள் மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் முன்னதாக செயலர் தந்தை அவர்கள் இவ்விவிலிய வினாடி வினா போட்டி குறித்த விளக்கங்களையும், விதிமுறைகளையும் கானொலி காட்சி வழியாக விளக்கி கூறினார்கள். நன்றி.
அருட்பணி.ச.லூர்து மரிய சுதன், செயலர்,
கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு