அன்புக்குரியவர்களே!
விவிலியப் பணிக்குழுவின் வணக்கங்களும் இறைவாழ்த்துக்களும்.
14.07.2024 இன்று நடைப்பெற்ற பொதுநிலையினருக்கான ஓர் ஆண்டு (2024-2025) சான்றிதழ் விவிலியப் பட்டயப் பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவை முதன்மைகுரு பேரருட்தந்தை G.J. அந்தோணிசாமி அவர்களும் அருள்பணி மைய இயக்குனர் அருள்தந்தை ஜோசப் ஜெயக்குமார் அவர்களும் தங்கள் சிறப்புரை வழங்கி தொடங்கி வைத்தார்கள். பயிற்சியில் இணைந்துள்ள 108 மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வாழ்த்துரை வழங்கிய பேரருட்தந்தை. G.J. அந்தோணிசாமி அவர்களுக்கும் அருள்தந்தை ஜோசப் ஜெயகுமார் அவர்களுக்கும் விவிலியப் பணிக்குழுவின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
சிறப்பாக இப்பயிற்சி வகுப்பு நடைபெற அனைத்து விதத்திலும் உதவிப்புரிந்த அருள்தந்தை ஜோசப் ஜெயக்குமார் அவர்களுக்கும் அருள்பணிமைய பணியாளர்கள் திரு. ஆரோக்கிய வாஸ், திரு. அருள்தாஸ் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும், எமது விவிலியப் பணிக்குழுவின் தன்னார்வ பணியாளர்களான திருமதி. சைனாதாஸ், திருமதி. அனுரோசினி மற்றும் செல்வன். மரிய ரொணால்டு அவர்களுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
செயலர்
அருள்தந்தை எட்வர்ட் அந்தோணிராஜி
விவிலியப் பணிக்குழு